Posts

வெற்றியடைவோம்

 ஒன்றுபடுவோம்/ ஒற்றுமையாக இருப்போம்/ உறங்கும் உலகை எழுப்புவோம்/ ஒன்றாய் இணைந்து குறைகளைக் களைவோம்/ மனிதநேயத்தை உணர்ந்து வாய்மையுடன் செயல்பட்டு வெற்றியடைவோம்/ ராதா பாலு

ஒழிந்துபோ ஒமைக்ரானே

Image
அன்பு பெருகி  ஆனந்தம் நிலைக்கட்டும்/ இன்ப வாழ்வு  இனியேனும் கிடைக்கட்டும்/ உன்னை ஒழித்து  ஊரெல்லாம் மகிழட்டும்/ ஓயாமல் மாறிவரும் ஒமைக்ரானே ஒழிந்துபோ/

நில்..சொல்..வெல்

Image
  பள்ளிப் பருவம் கள்ளமில்லா உள்ளம்/ துள்ளி விளையாடும் துன்பமில்லா காலம்// சிட்டுப்போல் பறக்கிறாள் சிங்காரச் சிறுமி/ மட்டில்லா மகிழ்ச்சி சிரிப்பில் தெரியுது//

தோட்ட மலர்களாய் தோன்று

Image
  நாட்டம் பெருகிட நற்றமிழ் மீதிலே/ வாட்டம் விலகி வறுமை அகன்றிட/ திட்டங்கள் யாவும் திடமாய் இருந்திட/ தோட்ட மலர்களாய்த் தோன்று//

அதிரடி ஹைக்கூ போட்டி

Image
முதுமையிலும் ஆர்வம்/ உலகை அறியும் ஆசை/ பாட்டியின் படிப்பு//  

தமிழன்னை காப்பாள் தமிழுன்னை

Image
  திக்கெட்டும் ஒலிக்கும் தமிழாம் மொழியழகு/ புகழ் நிறைக்கும் சீரிளமை வனப்பழகு/ கல்தோன்றா முன்தோன்றிய காவியச் சிறப்பழகு/ என்றென்றும் இனிக்கின்ற இயல்பான நடையழகு/ தென்னகத்து மென்மொழியின் திகட்டாத சுவையழகு/ இன்னிசைத்  தமிழில் கவிபாடும் கலையழகு/ கம்பன் பாரதியின்   கவின்தமிழ் மொழியழகு/ வார்த்தைகளால் வாயினிக்க பாடும் இசையழகு/ இளமையென்றும் மாறாத தாய்மொழியாம் தமிழழகு/ தமிழன்னை காப்பாள் தமிழுன்னை என்றுமே/

முடிவெடு..முடிசூடு

Image
  முயற்சியுடன் முனைந்திடு/ அயற்சியை நீக்கிடு/ சிறப்புடன் சிந்தித்திடு/ திறமையுடன் செயல்படு/ கருணையுடன் நடந்திடு/ திட்டங்கள் வகுத்திடு// வெற்றியை அடைந்திடு/ முடிவெடு முடிசூடு//