உணவு...உடை...உறைவிடம்...



உணவே உயிர்களின் வாழ்வுக்கு ஆதாரம்/

நலமாய் வாழ நல்லதை உண்போம்/


ஏழைக்கு இல்லை சுவையான உணவு/

பணம் படைத்தவனுக்கோ பத்திய உணவு/


உடலை மறைத்திட உடை அவசியம்/

பாரம்பரியம் வேண்டும் பகட்டு வேண்டாமே/


ஓடி உழைத்து செல்வத்தை தேடுபவனுக்கு/

நிம்மதியாய்ப் படுத்துறங்க சிற்றில்லம் தேவையே/


அகிலத்தில் பிறந்த அனைவர் ஆசையும்/

அழகிய வீடு சொந்தமாக வேண்டுமென்பதே/



 

Comments

Popular posts from this blog

முடிவெடு..முடிசூடு