தமிழன்னை காப்பாள் தமிழுன்னை
  திக்கெட்டும் ஒலிக்கும் தமிழாம் மொழியழகு/  புகழ் நிறைக்கும் சீரிளமை வனப்பழகு/  கல்தோன்றா முன்தோன்றிய காவியச் சிறப்பழகு/  என்றென்றும் இனிக்கின்ற இயல்பான நடையழகு/  தென்னகத்து மென்மொழியின் திகட்டாத சுவையழகு/  இன்னிசைத்  தமிழில் கவிபாடும் கலையழகு/  கம்பன் பாரதியின்    கவின்தமிழ் மொழியழகு/  வார்த்தைகளால் வாயினிக்க  பாடும் இசையழகு/  இளமையென்றும் மாறாத தாய்மொழியாம் தமிழழகு/  தமிழன்னை காப்பாள் தமிழுன்னை என்றுமே/
Comments
Post a Comment