Posts

Showing posts from December, 2021

ஒழிந்துபோ ஒமைக்ரானே

Image
அன்பு பெருகி  ஆனந்தம் நிலைக்கட்டும்/ இன்ப வாழ்வு  இனியேனும் கிடைக்கட்டும்/ உன்னை ஒழித்து  ஊரெல்லாம் மகிழட்டும்/ ஓயாமல் மாறிவரும் ஒமைக்ரானே ஒழிந்துபோ/

நில்..சொல்..வெல்

Image
  பள்ளிப் பருவம் கள்ளமில்லா உள்ளம்/ துள்ளி விளையாடும் துன்பமில்லா காலம்// சிட்டுப்போல் பறக்கிறாள் சிங்காரச் சிறுமி/ மட்டில்லா மகிழ்ச்சி சிரிப்பில் தெரியுது//

தோட்ட மலர்களாய் தோன்று

Image
  நாட்டம் பெருகிட நற்றமிழ் மீதிலே/ வாட்டம் விலகி வறுமை அகன்றிட/ திட்டங்கள் யாவும் திடமாய் இருந்திட/ தோட்ட மலர்களாய்த் தோன்று//

அதிரடி ஹைக்கூ போட்டி

Image
முதுமையிலும் ஆர்வம்/ உலகை அறியும் ஆசை/ பாட்டியின் படிப்பு//  

தமிழன்னை காப்பாள் தமிழுன்னை

Image
  திக்கெட்டும் ஒலிக்கும் தமிழாம் மொழியழகு/ புகழ் நிறைக்கும் சீரிளமை வனப்பழகு/ கல்தோன்றா முன்தோன்றிய காவியச் சிறப்பழகு/ என்றென்றும் இனிக்கின்ற இயல்பான நடையழகு/ தென்னகத்து மென்மொழியின் திகட்டாத சுவையழகு/ இன்னிசைத்  தமிழில் கவிபாடும் கலையழகு/ கம்பன் பாரதியின்   கவின்தமிழ் மொழியழகு/ வார்த்தைகளால் வாயினிக்க பாடும் இசையழகு/ இளமையென்றும் மாறாத தாய்மொழியாம் தமிழழகு/ தமிழன்னை காப்பாள் தமிழுன்னை என்றுமே/

முடிவெடு..முடிசூடு

Image
  முயற்சியுடன் முனைந்திடு/ அயற்சியை நீக்கிடு/ சிறப்புடன் சிந்தித்திடு/ திறமையுடன் செயல்படு/ கருணையுடன் நடந்திடு/ திட்டங்கள் வகுத்திடு// வெற்றியை அடைந்திடு/ முடிவெடு முடிசூடு//

அதிரடி ஹைக்கூ போட்டி

Image
  மங்கையின் கழுத்தில்/ தாங்க முடியாத சுமை/ தங்க நகைகள்//

நில்...சொல்...வெல்...

Image
  கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம்/ துள்ளி விளையாடும் வெள்ளை மனம்// கண்ணை மூடியபடி  கண்ணாமூச்சி ஆடும் குழந்தை மனம் என்றும் குதூகலமே// 

உணவு...உடை...உறைவிடம்...

Image
உணவே உயிர்களின் வாழ்வுக்கு ஆதாரம்/ நலமாய் வாழ நல்லதை உண்போம்/ ஏழைக்கு இல்லை சுவையான உணவு/ பணம் படைத்தவனுக்கோ பத்திய உணவு/ உடலை மறைத்திட உடை அவசியம்/ பாரம்பரியம் வேண்டும் பகட்டு வேண்டாமே/ ஓடி உழைத்து செல்வத்தை தேடுபவனுக்கு/ நிம்மதியாய்ப் படுத்துறங்க சிற்றில்லம் தேவையே/ அகிலத்தில் பிறந்த அனைவர் ஆசையும்/ அழகிய வீடு சொந்தமாக வேண்டுமென்பதே/  

தீபங்கள் ஏற்றினால் தீர்வு

Image
  பாபங்கள் நீங்கிடும் நல்லனவே பெருகிடும்/ தாபங்கள் தீர்ந்திடும்  நல்வழிகள் காட்டிடும்/ கோபங்கள் தணிந்து   கோபுரமாய் வாழ/ தீபங்கள் ஏற்றினால் தீர்வு//

ஒருவரி உடனடிக் கவிதை

Image
  இரும்பிலும் இருக்கிறது ஈரமான இதயம்

பொன்மொழி வெண்பா போட்டி

Image
  பொன்மொழி வெண்பா போட்டி பொன்னான ஆசானைப் போற்று/ நன்னெறியும்  நல்லறிவும் ஆற்றலும் தந்திட  இன்முகத்தால்  நற்சிறந்த கல்வியைத் தந்திட  மன்னும் உயிர்க்குமே  நன்மைகள் கற்பிக்கும் பொன்னான ஆசானைப் போற்று .

இல்வாழ்க்கை என்றும் இனிது//

Image
  இன்பமும் இனிமையும் மங்காது இருந்திட/ மன்னவன் காதலில் மங்கையும் மகிழ்ந்திட/ செல்லப் பிள்ளைகள் தங்கமாய்த் தாங்கிட/ இல்வாழ்க்கை என்றும் இனிது//

நட்சத்திரக் கவிதைகள்

Image
  மலர்வதெல்லாம் மணப்பதில்லை/ நினைப்பதெல்லாம் நடப்பதில்லை/ சொல்வதெல்லாம் செய்வதில்லை/ வாக்கினிலே உண்மையில்லை/ துன்பங்களை வில்க்கிடுவோம்/ நன்மைகளே  செய்திடுவோம்/ பழமைகளை  மதித்திடுவோம்/ புதுமைகளை  ஏற்றிடுவோம்/