தமிழன்னை காப்பாள் தமிழுன்னை


 


திக்கெட்டும் ஒலிக்கும் தமிழாம் மொழியழகு/

புகழ் நிறைக்கும் சீரிளமை வனப்பழகு/

கல்தோன்றா முன்தோன்றிய காவியச் சிறப்பழகு/

என்றென்றும் இனிக்கின்ற இயல்பான நடையழகு/

தென்னகத்து மென்மொழியின் திகட்டாத சுவையழகு/

இன்னிசைத்  தமிழில் கவிபாடும் கலையழகு/

கம்பன் பாரதியின்  
கவின்தமிழ் மொழியழகு/

வார்த்தைகளால் வாயினிக்க
பாடும் இசையழகு/

இளமையென்றும் மாறாத தாய்மொழியாம் தமிழழகு/

தமிழன்னை காப்பாள் தமிழுன்னை என்றுமே/

Comments

Popular posts from this blog

முடிவெடு..முடிசூடு