உணவே உயிர்களின் வாழ்வுக்கு ஆதாரம்/ நலமாய் வாழ நல்லதை உண்போம்/ ஏழைக்கு இல்லை சுவையான உணவு/ பணம் படைத்தவனுக்கோ பத்திய உணவு/ உடலை மறைத்திட உடை அவசியம்/ பாரம்பரியம் வேண்டும் பகட்டு வேண்டாமே/ ஓடி உழைத்து செல்வத்தை தேடுபவனுக்கு/ நிம்மதியாய்ப் படுத்துறங்க சிற்றில்லம் தேவையே/ அகிலத்தில் பிறந்த அனைவர் ஆசையும்/ அழகிய வீடு சொந்தமாக வேண்டுமென்பதே/